Skip to main content

Followers

பெண் கவிதை தொகுப்பு

தமிழ் மற்றும் அணைத்து பெண்களுக்கான கவிதை 

புவி நயமாட பூக்களும் இசைப்பாட
புருவம் இடையே நெற்றிப்பொட்டு இட்டு
மல்லிகையும் மணக்குமே அவள் தலைச்சுட
மஞ்சள் இட்டு மயில் நடைபோட்டு
வெள்ளி சலங்கோசை காற்றினில் படரவிட்டு
ஆர தழுவி அன்பாய் வளர்ந்து
யுத்தம் ஒன்று புரிந்து கல்வி கொண்டாய்
கயவனை களிக்கொண்டு விரட்டி
களைப்பறிய அகமும் புறமும் கொண்டாய்
பெற்றஇடம் துறந்து உற்றஇடம் புகுந்தாய்
இன்னல் பொறுத்து ஈகை வளர்த்தாய்
தமயனுக்கு தோழியாய் கணவனுக்கு அன்னையாய்
உற்றவனிடம் நேசம் காட்டி நெகிழ்ந்து
கரு சுமந்து உயிர் துறந்து
தாராயோ உயிர் ஒன்று
பசியென பிஞ்சு அழுகும் பொழுது
குருதி உரித்து அமுது தந்தாய்
வலியென இல்லாததுப்போல் ஓர் மெல்லச்சிரிப்பு
உன் புன்னைகை ஒன்று போதுமே
அகிலம் முழுவதும் மகிழ்ச்சி பரவிட
விலங்கிட்ட காலம்போய் நீ விளக்குகின்ற காலமிது
பெண் கூடும் பொருள் அல்ல
நீ என்றும் அதை  மறவாதே
பாரதி கூற்று நீ அறிவாய்
பெண் என்றும் தலை சாயாதே
பாரதம் போற்றும் நதியும் நீயே
ஆண்  வலியும்  நீயே வழியும் நீயே
பெண் இந்த மண்ணில் பிறக்க
ஆண் என்ன தவம் செய்தோமோ
ஆளுமையின் மற்றுமோர் அர்த்தமாய்
நாம் நடக்கும் வழித்தடமாய்
நாம் வாழும் கருவிடமாய்
அதிசயத்தின் ஓர் ஆச்சிரியக்குறி என்றும் பெண்

Comments

Post a Comment

Popular posts from this blog

சென்னையில் சஹர் உணவு கிடைக்கும் இடங்கள்/ Sahar Food at Chennai

சென்னையில் சஹர் உணவு கிடைக்கும் இடங்கள்: 1. Adyar - Hotel Topper (paid sahar) Near Adyar bus deppo, Masjid Campus Paid 3 and 4am Sahar available during entire ramalan 2. Guindy - Hotel Liberty (paid sahar) Hotel Liberty Paid 3.30 and 4:30 #64, Anna Salai, Guindy- Near to railway station 044-22317400, 22330719 3. Guindy - Alandur Masjid Masjid-E-Ahle Hadees, MKN Road, Alandur (near Aone stationary shop) Free 3 and 4.30am Last 5 odd nights (21,23,25,27   29) 4. Guindy Market - AKR Trust (AKR steel) Near Gandhi statue, Gandhi market, MKN Road, Guindy Free 3 and 4 am Sahar available during entire ramalan 5. Guindy Market - Masjid Near Gandhi statue, Gandhi market, MKN Road, Guindy Free 3 and 4 am Last 5 odd nights (21,23,25,27   29) 6. Kodambakkam Near to Kodambakkam Bridge and Hotel Udopi 1000/Month Advise to register the name earlier Mohamed Meeran Sahib - 9176807107 7. Nandanam (FB Masjid) Nandam Masjid, Mount Road, CIT Nagar, opp. YMCA ground, Nandanam F...

Sahar Foods in chennai 2025 - Updated

சென்னையில் சஹர் உணவு கிடைக்கும் இடங்கள்: Urapakkam  Pallikaranai T-Nagar Purasaivakkam Medavakkam Kamarajapuram Thiruvalluvar Nagar Perungudi Perambur North chennai Kalpakkam Kelambakkam Nemmali

Nagore Vaada

If you have leftover pulao/rice in your house then vaadaa is the perfect and good snack to bite out. I learned this recipe from friends who work as the chef. This is very famous food in roadside shops in Nagore, a coastal town in Tamilnadu. Its crispy outer and soft inner makes it irresistible. Ingredients Raw rice                      3/4 cup Leftover pulao              1/2cup Onion(thinly sliced)        1/4 cup Coconut(grated)            1/4 cup Soda bi carb                  a pinch Salt to taste Prawns(small)                10- 12(optional) Oil to fry Preparation: PreProcess Allow the Pulao to ferment for 15 to 20hrs. (The time differs with the seasons. For  sunny climate the time to ferment will be less, for very winter/spring...